சோதனைகளுக்காக பயன்படுத்தும் எக்ஸ்ரே இயந்திரங்கள் கடற்படைக்கு கையளிப்பு
டிசம்பர் 01, 2021ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதித் தலைவர் தோர்ஸ்டன் பார்க்ப்ரெட் மற்றும் ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றத்தடுப்பு அலுவலகத்தின் பிரதிநிதிகள் இணைந்து சோதனைகளுக்காக பயன்படுத்தும் நான்கு எக்ஸ்ரே இயந்திரங்களை கடற்படையிடம் நேற்று (நவம்பர் 30) கையளித்தனர்.
போதைப்பொருள் கடத்தல் மற்றும் இதர கடத்தல் நடவடிக்கைகளை தடுக்கும் கடற்படையின் முயற்சிகளை மேம்படுத்தும் வகையில் இந்த கருவிகள் கையளிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, சூட்சமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் போதைப் பொருட்கள் மற்றும் பிற கடத்தல் பொருட்களை குறித்த கையடக்க கருவிகள் மூலம் திறம்பட கண்டுபிடிக்க முடியும் என கடற்படை தெரிவித்துள்ளது.
கடற்படை தலைமையகத்தில் இடம்பெற்ற வைபவத்தின் போது கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன இந்த நன்கொடையைப் பெற்றுக்கொண்டார்.
இந்த நிகழ்வில் கடற்படையின் பிரதம அதிகாரி, சிரேஷ்ட கடற்படை அதிகாரிகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றத்தடுப்பு அலுவலக பிரதிநிதிகள் குழு கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.