இத்தாலிய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பாதுகப்பு செயலாளருடன் சந்திப்பு

டிசம்பர் 06, 2021

இந்தியா, பங்களாதேஷ், நேபாளம் மற்றும் இலங்கைக்கான இத்தாலிய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் (கடற்படை)  பப்ரிஸியோ பல்ஸி, கொழும்பில் உள்ள இத்தாலியத் தூதுவர் மேதகு ரீட்டா கியுலியானா மன்னெல்லாவுடன் இணைந்து  பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை இன்று (டிசம்பர் 06) சந்தித்து கலந்துறையாடினார்.

இன்றைய தினம் பாதுகாப்பு அமைச்சுக்கு தனது முதல் விஜயத்தை மேற்கொண்ட இத்தாலிய பாதுகாப்பு ஆலோசகர், இந்த சந்திப்பின்போது  இரு நாடுகளுக்கும் இடையில் தற்போதுள்ள பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக  பாதுகாப்பு செயலாளருடன் சிநேகபூர்வமாக கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டார்.

இந்த சந்திப்பில் பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் தினேஷ் நானயக்காரவும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.