புதிய இராணுவத பிரதம அதிகாரி நியமனம்

டிசம்பர் 07, 2021

இலங்கை இராணுவத்தின் 59ஆவது பிரதம அதிகாரியாக மேஜர் ஜெனரல் விகும் லியனகே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.  2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் 07ஆம் திகதி முதல் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை இராணுவத்தின் 58ஆவது பிரதம அதிகாரியாக இதுவரை காலமும் சேவையாற்றிய மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா இராணுவத்திலிருந்து அண்மையில் ஓய்வுபெற்றுச் சென்றதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே இராணுவ தொண்டர் படையணியின் கட்டளைத்தளபதியாக பதவி வகித்த  மேஜர் ஜெனரல் விகும் லியனகே புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார்.