யாழ் இளைஞர்களுக்கு உயிர்காப்பு பயிற்சி
டிசம்பர் 08, 2021இலங்கை கடற்படையினரால் யாழ்ப்பாணத்தில் உள்ள இளைஞர்கள் குழுவிற்கு உயிர்காப்பு பயிற்சிப் பாடநெறி அண்மையில் வழங்கப்பட்டது. யாழ்ப்பாணம் காரைநகரில் அமைந்துள்ள எலார கடற்படை முகாமில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 16 இளைஞர்கள் அடங்கிய குழுவொன்று கலந்துகொண்டதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடற்படை சமூகப் பொறுப்புணர்வு முயற்சியின் ஒரு பகுதியாக,கடற்படையின் வடக்கு கடற்படைக் கட்டளையகம் 2021/01 மற்றும் 2021/02 ஆம் ஆண்டுக்கான லைஃப் வெண்கலப் பதக்கப் பயிற்சியை நடத்தியது.
மூன்று வார கால உயிர்காப்பு பயிற்சியில் கலந்துகொண்டு பாடநெறியை வெற்றிகரமாக பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ்களை வடமாகாண ஆளுநர் கௌரவ. ஜீவன் தியாகராஜா மற்றும் வடக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் பிரியந்த பெரேரா ஆகியோர் வழங்கி வைத்தனர்.
கடற்படையின் விரைவு மீட்பு மற்றும் நிவாரணப் பிரிவின் உதவியுடன் இலங்கையின் உயிர்காப்பு மற்றும் நாேர்த்விண்ட் திட்டங்களுடன் இணைந்து கடற்படை இந்த உயிர்காப்பு பாடத்திட்டத்தை ஏற்பாடு செய்தது.
பாடநெறியை வெற்றிகரமாக பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் இந்த நிகழ்வு, சுகாதார வழிகாட்டுதலுக்கமைய இடம்பெற்றதாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.