இரங்கல் செய்தி

டிசம்பர் 09, 2021

இந்திய ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் மற்றும் திருமதி மதுலிகா ராவத் ஆகியோரின் துயர மரணத்திற்கு பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன, பாதுகாப்பு அமைச்சின் பணியாளர்கள் மற்றும் இலங்கை முப்படையினர் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கின்றனர். புதன்கிழமை (டிசம்பர் 08, 2021) தமிழ்நாடு குன்னூரில் நடந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் தமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறார்கள்.