செனகல் பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

டிசம்பர் 10, 2021

புது டில்லி மற்றும் இலங்கைக்கான செனகல் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் மாலிக் தியாவ், பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை இன்று (டிசம்பர்,10) சந்தித்தார். இந்த சந்திப்பு ஸ்ரீ ஜெயவர்தனபுர, கோட்டேயில் அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சில் இன்று இடம்பெற்றது.

இந்த சந்திப்பின்போது இலங்கையில் உள்ள பயிற்சி வசதிகள் உள்ளிட்ட இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக பாதுகாப்பு செயலாளர், செனகல் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் தியாவுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டார்.

மேலும், இந்த சந்திப்பினை நினைவு கூறும் வகையில் நினைவுச்சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் தினேஷ் நாணயக்கார மற்றும் செனகல் தூதரகத்தின் துணை பாதுகாப்பு ஆலோசகர் அலியோ மானே ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்தும் சுகாதார நடைமுறைகளுக்கு ஏற்ப இந்த கூட்டம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.