தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் வருடாந்த ஆய்வு கருத்தரங்கு பாதுகாப்பு செயலாளரினால் அங்குரார்ப்பணம்

டிசம்பர் 14, 2021
  • தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் திறன், உத்தேச தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவன சட்டத்தின் மூலம் முறையான மேலதிக அதிகாரங்களுடன் வலுப்படுத்தப்படும் என பாதுகாப்பு செயலாளர் தெரிவித்தார்

பத்தரமுல்லவில் அமைந்துள்ள வாேட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் இடம்பெற்ற தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் 11வது ஆண்டு ஆய்வு கருத்தரங்கு - 2021 இல் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் 11வது ஆண்டு ஆய்வு கருத்தரங்கு - 2021, “கட்டிட நெகிழ்வுத்தன்மைக்கு வலுச்சேர்க்கும் புத்தாக்கம் ” எனும் தொனிப்பொருளில் இன்று (டிசம்பர்,14) இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பாதுகாப்பு செயலாளரும் தேசிய பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் செயலாளருமான ஜெனரல் கமல் குணரத்ன பிரதம அதிதியாக கொண்டார்.

இரண்டு நாட்கள் இடம்பெறும் இந்த கருத்தரங்கின் முதல் நாள் நிகழ்வுக்கு வருகை தந்த பாதுகாப்புச் செயலாளரை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் பொறியியலாளர் கலாநிதி ஆசிரி குணவர்தன வரவேற்றார்.

பாதுகாப்பு செயலாளர், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க மற்றும் உலக உணவுத் திட்டத்தின் நாட்டுப் பணிப்பாளர் திரு. அப்துல் ரஹீம் சித்திகி ஆகியோர் இந்நிகழ்வுக்கு தலைமை வகித்தனர்.

நாட்டில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களினால் உயிரிழந்த அனைத்து உயிர்களுக்கும் அஞ்சலி செலுத்தும் வகையில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இணைய தொழிநுட்பம் மற்றும் நேரடி பங்கேற்பு மூலம் இடம் பெற்ற இந்த நிகழ்வில் ஆராய்ச்சியாளர்கள், அனர்த்த முகாமைத்துவ பயிற்சியாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் உள்ளூர் மற்றும் சர்வதேச நிறுவனங்களின் புகழ்பெற்ற வல்லுநர்கள் பங்குபற்றினர்,

அங்குரார்ப்பண அமர்வின் நடவடிக்கைகளின் போது, ​​"அனர்த்தங்களுக்கு ஈடுகொடுக்கும் கட்டுமானத்திற்கான தொழில்நுட்ப வழிகாட்டுதல்கள்" என்ற தலைப்பில் ஒரு புத்தகம் வெளியிடப்பட்டது, மேலும் "நிகழ்நேர மண்சரிவு முன்னெச்சரிக்கை பரப்புதல்" என்ற மொபைல் பயன்பாட்டின் வடிவத்தில் மற்றொரு புதுமையான சேவையை அறிமுகப்படுத்தியது.

இந்த நிகழ்வில் உரையாற்றிய பாதுகாப்பு செயலாளர், ஜனாதிபதியின் 'சுபீட்சத்தின் நோக்கு' கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் திறன், உத்தேச தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவன சட்டத்தின் மூலம் முறையான மேலதிக அதிகாரங்களுடன் வலுப்படுத்தப்படும் என பாதுகாப்பு செயலாளர் தெரிவித்தார்

காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள் காரணமாக பேரழிவுகளை நிர்வகித்தல் ஒரு அழுத்தமான பிரச்சினை என்றும், இயற்கை மற்றும் மனித தலையீடுகள் காரணமாக பல அழுத்தங்கள் இணைந்திருப்பதால் எதிர்காலத்தில் நிலைமை தீவிரமடையக்கூடும் என்றும் அவர் கூறினார்.

அனர்த்தங்களை இழிவாக்கும், குறைக்கும், புனர்வாழ்வு மற்றும் புனரமைப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதன் மூலம் அனர்த்த அபாயத்தைக் குறைப்பதில் அறிவியல் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளின் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்தார்.

தேசிய பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் முக்கிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மற்றும் தொழில்நுட்ப நிறுவனமாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவமானது அனர்த்த முகாமைத்துவம், வீட்டுவசதி மற்றும் கட்டுமானத் துறைகளில் விரிவான மற்றும் பலதரப்பட்ட தொழில்நுட்ப வழிகாட்டல்களை வழங்கி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

நாட்டில் அனர்த்தங்களின் அபாயத்தைக் குறைப்பதற்கான முன்னரே தீர்மானிக்கப்பட்ட இலக்குகளை அடைவதில் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் பங்களிப்பையும், அதிதீவிர காலநிலையால் ஏற்படும் அனர்த்தங்களின் போது வழங்கப்பட்ட தொழில்நுட்ப பங்களிப்பையும் அவர் பாராட்டினார்.

நாட்டின் சமூக-பொருளாதார வளர்ச்சியில் அனர்த்தங்களை சீராக்குவதற்கு கூட்டு நடவடிக்கையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, தேசிய பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் கீழ் உள்ள அனர்த்த முகாமைத்துவ திணைக்களங்கள் மற்றும் பிற நிறுவனங்களின் அனைத்து பங்குதாரர்களுக்கும் பாதுகாப்பு செயலாளர் கோரிக்கை விடுத்தார்.

பொறியியலாளர் கலாநிதி ஆசிரி கருணாவர்தனவினால் இந்த நிகழ்வின் போது பாதுகாப்புச் செயலாளருக்கு நினைவுச்சின்னம் ஒன்றும் பரிசளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வின் சிறப்புரை நியூசிலாந்து வெலிங்டனைச் சேர்ந்த பொறியியலாளர் மைக் ஸ்டானார்ட்டினால் இனையம் மூலம் நிகழ்த்தப்பட்டது.

தொழில் வல்லுநர்கள், சிரேஷ்ட அரச அதிகாரிகள் மற்றும் லைன் ஏஜென்சிகளின் பிரதிநிதிகள் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.