முல்லைத்தீவில் தேவையுடையோருக்கு இராணுவம் உதவி
டிசம்பர் 15, 2021முல்லைத்தீவு பிராந்தியத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் மனிதாபிமான மற்றும் சமூக அடிப்படையிலான திட்டங்கள் பல முல்லைத்தீவு பாதுகாப்புப் படை தலைமையகத்தின் கீழ் உள்ள படைவீரர்களினால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்கமைய, சிலவத்தை பகுதியில் கொட்டகை ஒன்றில் வசித்து வந்த குடும்பத்திற்காக ஒரு புதிய வீடு நிர்மாணிக்கப்பட்டது. நன்கொடையாளர் ஒருவரின் நிதியுதவியுடன் 591வது பிரிகேட் கீழ் உள்ள 24வது சிங்கப்படையணி வீரர்களினால் இந்த வீடு நிர்மாணிக்கப்பட்டதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், 591 பிரிகேட்டின் கீழ் உள்ள 12வது இராணுவ இலேசாயுத படைவீரர்களினால் வட்டுவாக்கல் பிரதேசத்தில் வசிக்கும் புனர்வாழ்வளிக்கப்பட்ட அங்கவீனமுற்ற முன்னாள் போராளி எம்.கஜன் என்பவருக்கு நன்கொடையாளர் ஒருவரினால் வழங்கப்பட்ட நிதியுதவி மூலம் ஒரு புதிய கழிவறை இன்று நிமாநித்துக் கொடுக்கப்பட்டது. அத்துடன் புதரிக்குடா கிராம சேவகர் பிரிவில் வசிக்கும் தேவையுடைய குடும்பஸ்திரியான நந்தனி மல்லிகாவின் பகுதியளவில் நிர்மாணிக்கப்பட்டவீட்டின் நிர்மாணப்பணிகளை 592 பிரிகேட்டின் கீழ் உள்ள 23வது இராணுவ இலேசாயுத படைவீரர்களினால் நன்கொடையாளர் ஒருவரின் உதவியுடன் பூர்த்தி செய்து கொடுத்ததாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து சிரமங்களை எதிர்நோக்கிய முல்லியவெளி வித்யாநந்தா தேசிய பாடசாலையின் பல மாணவர்களுக்கு நன்கொடையாளர்களின் உதவியுடன் சைக்கிள் வண்டிகள் வழங்கப்பட்டதுடன் வெகுமதியான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன. மற்றுமொரு நிகழ்வில் தகுதியான எட்டு மாணவர்களுக்கு புதிய சைக்கிள் வண்டிகள் பரிசாக வழங்கப்பட்டன, அத்துடன் முல்லைத்தீவு நந்திக்கடல் பகுதியில் தேவைப்பட்ட மாணவர்களுக்கு 80 தொகுதி பாடசாலை பொருட்கள் அடங்கிய பொதிகள் வழங்கி வைக்கப்ட்டதாக இராணுவம் மேலும் தெரிவித்துள்ளது.
59வது பிரிவின் கீழ் உள்ள படையினர், தனியார் நன்கொடையாளர் பங்களிப்பு மூலம் கொக்கிளாயில் உள்ள சம்போதி விஹாரைக்கு வடிகால் உதிரிபாகங்கள், எல்இடிமின்குமில்கள் மற்றும் 1000 லிட்டர் நீர் தொட்டி ஆகியவற்றை வழங்குவதற்கு வசதியளித்துள்ளனர்.
இந்த சமூக சேவை நிகழ்ச்சித்திட்டங்கள் முல்லைத்தீவு பாதுகாப்புப் படைகள் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்கவின்மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்பட்டதாக இராணுவம் மேலும் தெரிவித்துள்ளது.