முல்லைத்தீவில் முன்பள்ளியின் அபிவிருத்திக்கு படையினர் உதவி

ஆகஸ்ட் 13, 2019

இலங்கை இராணுவத்தினர் முல்லைத்தீவு கலைவாணி முன்பள்ளிக்கு தேவையான வெளிக்கள விளையாட்டு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கு உதவி வழங்கியுள்ளனர்.

இதன்பிரகாரம் முல்லைத்தீவு கலைவாணி அம்பலவன்பொக்கனை முன்பள்ளியின் சிறுவர்களுக்கான விளையாட்டு பகுதியின் புதிய வசதிகளை 68ஆவது பிரிவின் கீழ் உள்ள 681 படைப்பிரிவினுடைய விஜயபாகு காலாட்படை பிரிவின் 14 வீரர்கள் அவர்களின் நிபுணத்துவம் மற்றும் உழைப்பு ஆகியவற்றை அண்மையில் (ஆகஸ்ட், 06 ) வழங்கியுள்ளனர்.

பாடசாலை நிருவாகத்தினரால் விடுக்கப்பட்ட வேண்டு கோளுக்கு இணங்க இவ்வுதவியினை படையினர் மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை, ஒட்டுசுட்டான் பகுதியில் கடும் காற்றின் காரணமாக முறிந்து வீழ்ந்த மரத்தினை அகற்றும் பணிக்காக முல்லைத்தீவு படையினர் விரைந்துள்ளனர். வாகன போக்குவரத்தினை துண்டிக்கும் வகையில் வீதியின் குறுக்கே மரம் விழுந்துள்ளதுடன், இதனை அகற்றுவதற்காக சுமார் நாற்பது வீரர்கள் கொண்ட குழு ஒன்று மரத்தை அகற்றும் பணிகளை மேற்கொண்டு மீண்டும் போக்குவரத்தை வழமைக்கு கொண்டுவந்துள்ளனர்.