வருடாந்த 'எசல பெரஹெர' வெற்றிகரமாக நிறைவு
ஆகஸ்ட் 15, 2019புத்த பெருமானின் புனித தந்ததாது நினைவுச் சின்னத்தினை கௌரவப்படுத்தும் வகையில் நடத்தப்படும் மாபெரும் வரலாற்று நிகழ்வான 'எசல பெரஹெர' இனிதே நிறைவுக்கு வந்தது. இம்மாத தொடக்கத்தில் (ஆகஸ்ட், 05) ஆரம்பமான மாபெரும் கலாச்சார நிகழ்வான 'எசல பெரஹெர' கடந்த பத்து நாட்களாக வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி மா நகரில் இடம்பெற்றது. இறுதி நிகழ்வான ரந்தோலி பெரஹெர நேற்று இரவு (ஆகஸ்ட், 14) இடம்பெற்றது.
வருடாந்த 'எசல பெரஹெர' நிகழ்வினை வெற்றிகரமாக நிறைவு செய்யும் நோக்கில் பெரஹெர காலங்களின்போது முப்படை, பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படையினால் ஒருங்கிணைக்கப்பட்ட சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. பெரஹெர காலங்களில் அங்கு வருகைதரும் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள், கலைஞர்கள் மற்றும் நகரவாசிகளுக்கு அதிகபட்ச பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பெரஹெரவுக்கு முன்னர் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்களினால் பல சுற்று சிறப்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. 'எசல பெரஹெர' (ஆகஸ்ட், 04) தொடங்குவதற்கு முன்னர் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்ய தனிப்பட்ட முறையில் கண்டிக்கு வருகை தந்ததுடன் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து அறிந்துகொண்டார்.
மக்கள் மற்றும் இருப்பிடங்களுக்கு முழு பாதுகாப்பை உறுதி செய்வதில் முப்படை, காவல்துறை மற்றும் சிவில் பாதுகாப்பு படையினர் காட்டிய விடாமுயற்சி மற்றும் அர்ப்பணிப்பு ஆகியன நன்கு அவதானிக்கும் வகையில் காணப்பட்டது. இந்த ஆண்டு பெரஹெர நிகழ்வினை கண்டுகளிக்க பெருந்திரளான உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் மற்றும் பக்தர்கள் ஆகியோர் மத்திய மலை நாட்டின் தலைநகரான கண்டி மா நகரிற்கு வருகை தாந்திருந்தனர். அவர்கள் பெரஹெரவின் போது அமுல்படுத்தப்பட்டிருந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த முழு நம்பிக்கையுடன் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.