விமானப்படைக்கு அரச துறையின் சிறந்த ஆண்டறிக்கை மற்றும் கணக்கறிக்கைகளுக்கான வெள்ளி விருது

டிசம்பர் 31, 2021

அரச துறைகளில் 2019 ஆம் ஆண்டின் நிதியாண்டிற்கான ‘ஆண்டறிக்கை மற்றும் கணக்கறிக்கைகளுக்கான’ வெள்ளி விருது விமானப்படைக்கு வழங்கப்பட்டது.

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வின் போது விமானப்படையின் சார்பாக கட்டளையக உள் கணக்காய்வாளர், விங் கொமாண்டர் ஆர்.ஆர்.சோமதிலக்க இந்த விருதை பெற்றுக்கொண்டார்.

2019 ஆம் ஆண்டின் நிதியாண்டிற்கான விருது வழங்கும் இந்த விழாவில் நிதி அமைச்சின் செயலாளர் திரு. எஸ்.ஆர். ஆட்டிகல கலந்து சிறப்பித்ததாக விமானப்படை தெரிவித்துள்ளது.

‘இலங்கையின் அரச நிதிக் கணக்காளர்களின் சங்கம்’ நிதி அமைச்சுடன் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.

பின்னர், விமானப்படைத் தலைமையகத்தில் விங் கொமாண்டர் சோமதிலகவினால் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரனவிடம் இந்த விருது கையளிகப்பட்டது.

5 வது முறையாக இந்த ஆண்டுக்கான போட்டி நடத்தப்பட்டதாக விமானப்படை மேலும் தெரிவித்துள்ளது.