பாதுகாப்பு அமைச்சு மற்றும் அதன் கீழ் நிறுவனங்களின் முதல் வேலை நாள் நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளர் கலந்து சிறப்பிப்பு

ஜனவரி 04, 2022

பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் தேசிய பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் செயலாளருமான ஜெனரல் கமல் குணரத்ன, மலர்ந்துள்ள 2022ஆம் ஆண்டின் முதலாவது வேலை நாளன்று பாதுகாப்பு அமைச்சு மற்றும் அதன் முக்கிய நிறுவனங்களில் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதை குறிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட உத்தியோகபூர்வ நிகழ்வுகளில் கலந்து கொண்டார்.

இதற்கமைய அவர், தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனம் மற்றும் உள்ளக பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், மற்றும் உள்நாட்டு அலுவல்கள் பிரிவு ஆகிய நிறுவங்களின் ஏற்பாடு செய்யப்பட நிகவுகளில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். மேலும் இந்த நிகழ்வில் அந்தந்த நிறுவனங்களின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டமை குறிபிடத்தக்கது.