வெளிநாடுகளிலிருந்து வரும் இலங்கையர்களுக்கு விமானப்படை ஊடாக
விமான நிலையத்தில் தடுப்பூசி

ஜனவரி 07, 2022

வெளிநாடுகளில் இருந்து வரும் இலங்கையர்களுக்கு தடுப்பூசிகளை வழங்குவதற்கென பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விஷேட கொவிட்-19 தடுப்பூசி மையம் ஒன்றை இலங்கை விமானப்படை ஸ்தாபித்துள்ளது.

24x7 என்ற அடிப்படையில் 24 மணித்தியாலங்கள் இந்த விஷேட கொவிட்-19 தடுப்பூசி மையம் செயற்படுவதாக இலங்கை விமானப் படையின் பேச்சாளர் குரூப் கெப்டன் துஷான் விஜேசிங்ஹ எமது பாதுகாப்பு அமைச்சு இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் வருகைத்தரும் இலங்கையர்களில் முதலாவது, இரண்டாவது அல்லது பூஸ்டர் தடுப்பூசிகள் பெற்றுக் கொள்ள முடியாமல் போனவர்கள் பைசர் தடுப்பூசியை விமான நிலையத்திலேயே மிக இலகுவாக பெற்றுக் கொள்ளும் பொருட்டே இந்த புதிய தடுப்பூவி மையம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.