--> -->

பிரதமரினால் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் புதிய பீடமும் புதிதாக
நிர்மாணிக்கப்பட்ட பிரதான நுழைவாயிலும் திறந்துவைப்பு

ஜனவரி 10, 2022

• புதிய பீடமான 'தொழில்நுட்ப பீடம்' திறந்து வைப்பு

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம், தனது 10வது பீடமான தொழில்நுட்ப பீடத்தை இன்று (ஜனவரி, 10) இரத்மலானையில் உள்ள கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வின் போது ஆரம்பித்து வைத்தது. இந்த நிகழ்வு கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பிரமாண்ட பிரதான நுழைவாயிலை திறந்து வைக்கும் நிகழ்வுடன் ஆரம்பானது.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக உபவேந்தர் மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸின் அழைப்பின் பேரில் 5வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியும் தற்போதைய பிரதமருமான கௌரவ. மஹிந்த ராஜபக்ஷ பிரதம அதிதியாகக் கலந்து கலந்து சிறப்பித்தார்.

திறன் வாய்ந்த பட்டதாரிகள் மற்றும் தொழில் சார் நிபுணர்களை உருவாக்குவதைக் கருத்தில் கொண்டு, கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் இந்த புதிய பீடத்தினை நிறுவி மாணவர்களுக்கு வாழ்க்கைத் திறன் சார் கற்கைகள் உட்பட பரந்த அளவிலான கற்கைநெறிகள் வழங்க எதிர்பார்க்கிறது.

பல்கலைக்கழக உப வேந்தரின் வரவேற்பு உரையைத் தொடர்ந்து , கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக நிர்வாக சபையின் தலைவரான பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன உரையாற்றினார்.

மேலும், இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் ராஜபக்ஷ, வெளிநாட்டுக் கல்வியைத் தொடர எதிர்பார்க்கும் இலங்கை மாணவர்களை நாட்டிலேயே தக்கவைத்துக் கொள்வதன் மூலம் பெருமளவிலான வெளிநாட்டு நாணயத்தைச் சேமிப்பதற்கு கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.

புதிதாக நிறுவப்பட்டுள்ள இந்த பீடத்தின் மூலம், நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான நிபுணர்களை கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக உரும்வாக்கும் என தாம் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வை சிறப்பிக்கும் வகையில் பல்கலைக்கழக உபவேந்தர் மேஜர் ஜெனரல் பீரிஸினால் பிரதம அதிதிக்கு நினைவுச் சின்னம் ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டது.

இதனையடுத்து தொழிநுட்ப பீடத்தின் பீடாதிபதி கலாநிதி கே.எம்.ஜி.பிரேமதாசவினால் நன்றியுரை நிகழ்த்தப்பட்டது.

சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைய இடம்பெற்ற இந்த நிகழ்வில், மேல் மாகாண ஆளுநர் முன்னாள் விமானப்படைத் தளபதி மார்ஷல் ஒப் தி எயார்போர்ஸ் ரொஷான் குணதிலக, கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் அமரதுங்க சம்பத் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பிரதி உபவேந்தர்கள், பீடங்களின் பீடாதிபதிகள், பணிப்பாளர்கள், இராணுவ அதிகாரிகள் மற்றும் அதிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.