எகிப்தின் புதிய தூதுவர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

ஜனவரி 12, 2022

இலங்கைக்கான எகிப்து அரபுக் குடியரசின் புதிய தூதுவர் அதிமேதகு மஜித் மொஸ்லே இன்று (ஜனவரி, 12) பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவைச் சந்தித்தார்.

ஸ்ரீ ஜயவர்தனபுர, கோட்டேயில் அமைந்துள்ள பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது, பாதுகாப்புச் செயலாளர் மற்றும் எகிப்திய தூதுவர் ஆகியோருக்கிடையில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இதன்போது, இந்த நிகழ்வினை நினைவு கூறும் வகையில் பாதுகாப்புச் செயலாளரினால் எகிப்திய தூதுவருக்கு நினைவுச் சின்னம் ஒன்று கையளிக்கப்பட்டது.

இந்த இரு தரப்பு கலந்துரையாடல் கொவிட்-19 பரவலைத் தடுக்கும் சுகாதார வழிகாட்டுதல் களுக்கு அமைய இடம்பெற்றது.

கொழும்பில் அமைந்துள்ள எகிப்து அரபுக் குடியரசின் தூதுவராக அதிமேதகு மஜித் மொஸ்லே 2021 டிசம்பர் 21 அன்று ஜனாதிபதி மாளிகையில் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் நியமனப் பத்திரத்தை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.