"ரண பரஷுவ" ஜனாதிபதி வர்ண விருது இராணுவ விஷேட படையணிக்கு வழங்கிவைப்பு
ஆகஸ்ட் 16, 2019படை பிரிவுக்கான புதிய தலைமை அலுவலகம் ஜனாதிபதியினால் திறந்து வைப்பு
இராணுவ விஷேட படையணிக்கு ஜனாதிபதி மற்றும் ரெஜிமென்ட் வர்ணங்களை அளிக்கும் “ரண பரஷுவ” விருது வழங்கும் நிகழ்வு அதிமேதகு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (ஆகஸ்ட்,16) மாத்தளை, நாவுலவில் உள்ள இராணுவ விஷேட படையணி தலைமையகத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்களும் கலந்து சிறப்பித்தார்.
வாகன பவனி மூலம் வைபவ இடத்திற்கு ஜனாதிபதிவருகை தந்த ஜனாதிபதி அவர்கள் வளாகத்தில் அமைந்துள்ள போர்வீரர்களின் நினைவுத்தூபிக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.
பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் போது இராணுவ விஷேட படை படையணியினால் வழங்கப்பட்ட பங்களிப்பினை அங்கீகரிக்கும் வகையில் "ஜனாதிபதி ரண பரஷுவ" மற்றும் "ரெஜிமென்டல் ரண பரஷுவ" வர்ணங்கள் அளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. மனிதாபிமான நடவடிக்கைகளின் போது இராணுவ விஷேட படையணி தாய்நாட்டிலிருந்து பயங்கரவாதத்தின் துன்பத்தைத் துடைத்தெரிவதற்கு காத்திரமான பங்களிப்பினை நல்கியது. வீரத்தின் அடையாளமான “ரண பரஷுவ” வர்ண விருது வழங்கப்படுவது வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.
இந்நிகழ்வின் தொடர்ச்சியாக படை பிரிவுக்காக புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தலைமை அலுவலகம் ஜனாதிபதியின் கரங்களினால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில், பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன, முப்படை தளபதிகள், சிரேஷ்டமுப்படை அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.