கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் சர்வதேச கணிப்பொறி ஆய்வு இதழ் வெளியிடப்பட்டது
ஜனவரி 18, 2022ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் கணினி பீடத்தால் வெளியிடப்பட்ட சர்வதேச கணிப்பொறி ஆய்வு இதழின் தொகுதி 01இன் வெளியீடு 01 அண்மையில் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வளாகத்தில் வெளியிடப்பட்டது.
இதன் போது கணினி பீடத்தின் பீடாதிபதி கலாநிதி ஏ.டி.ஏ.ஐ குணசேகர முதல் பிரதியை கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸிடம் கையளித்ததாக பல்கலைக்கழக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வெளியீடானது மதிப்பாய்வு செய்யப்பட்ட ஈராண்டு வெளியீடு என்றும், இது உள்ளூர் மற்றும் சர்வதேச ஆராய்ச்சியாளர்களுக்கு ஒரு தளத்தை வழங்குவதுடன் கணினியில் அண்மைக்கால அறிவைப் பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்பை வழங்குவதாகவும் பல்கலைக்கழக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தொகுப்பில் உள்ள ஒவ்வொரு கட்டுரையும் உயர்தர ஆய்வின் பின்னர் எழுதப்பட்டுள்ளது, மேலும் இது இந்த துறைசார்ந்த எதிர்கால ஆய்வினை விரிவுபடுத்த உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் பிரதி உபவேந்தர்கள், சர்வதேச கணிப்பொறி ஆய்வு இதழின் பிரதம ஆசிரியர் கலாநிதி எச்ஆர்டபிள்யூபி குணதிலக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.