பங்களாதேஷ் கடற்படை தளபதி பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு

ஜனவரி 19, 2022

பங்களாதேஷ் கடற்படை தளபதி அட்மிரல் எம் ஷஹீன் இக்பால், பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை இன்று சந்தித்தார். இந்த சந்திப்பு ஸ்ரீ ஜெயவர்தனபுர, கோட்டேயில் அமைந்துள்ள பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் இன்று (ஜனவரி 19) இடம்பெற்றது.

பாதுகாப்பு அமைச்சு வளாகத்திற்கு வருகை தந்த பங்களாதேஷ் கடற்படைத் தளபதியை பாதுகாப்புச் செயலாளர் வரவேற்றதுடன், அவர்களிடையே இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் மற்றும் பயிற்சி வாய்ப்புகளை வழங்குதல் தொடர்பாக சினேக பூர்வ கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

மேலும் இந்த நிகழ்வினை நினைவு கூறும் வகையில் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் பங்களாதேஷ் கடற்படைத் தளபதி ஆகியோருக்கிடையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

கொவிட்-19 பரவலைத் தடுக்கும் சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைய இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் பாதுகாப்பு அமைச்சின் பிரதி இராணுவ இணைப்பு அதிகாரி பிரிகேடியர் சுமித் நந்தனவும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது குறிப்பிடத்தக்கது.