வண. கொலமுன்னே சுமனவன்ச தேரர் பட்டமளிப்பு விழாவில் பாதுகாப்புச் செயலாளர் பங்கேற்பு

ஜனவரி 23, 2022

பிலியந்தலை, கொலமுன்னே ஸ்ரீ பிம்பராம விஹாரையில் இன்று (ஜனவரி 23)இடம் பெற்ற சமய வைபவத்தின் போது வண. கொலமுன்னே சுமணவன்ச தேரருக்கு பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன, விஜினிபாதத்தை (பாரம்பரிய விசிறி ) வழங்கினார்.

வண. சுமனவன்ச தேரருக்கு கல்கொட மகா விகாரையின் பிரதி பிரதம சங்கநாயக பீடத்தின் சமய பதவியை வழங்குவதற்காக இந்த வைபவம் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த சமய விழாவிற்கு வணக்கத்திற்குரிய பேராசிரியர் கொட்டபிட்டியே ராகுல அனு நாயக்க தேரர் தலைமை தாங்கியதுடன் அனுஷாசனம் வழங்கினார்.

வணக்கத்துக்குறிய மஹா சங்கத்தினரின் பங்கேற்புடன் இடம் பெற்ற பிரசாத பூஜை நிகழ்வில் மின்சக்தி அமைச்சர் மாண்புமிகு. காமினி லொகுகேயும் கலந்து கொண்டார்.