--> -->

காலி கடற்கரையினை தூய்மைப்படுத்தும் பணிகளில் கடற்படையினர் ஈடுபாடு

ஜனவரி 24, 2022

காலி கடற்கரை பிரதேசத்தை தூய்மைப்படுத்தும் பணிகள் அண்மையில் கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டது.

பிளாஸ்டிக் மற்றும் பாெலித்தீன் கழிவுகள் கடலுக்குள் சேர்வதை தடுக்கும் வகையில் இந்தத் திட்டம் கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
 
இதற்கமைவாக, தெற்கு கடற்படை கட்டளையகத்தின் கீழ் இயங்கும் இரண்டு கடற்படை நிறுவனங்கள் பொதுமக்களின் உதவியுடன் கடற்கரையை சுத்தம் செய்யும் பணியினை மேற்கொண்டதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

தெவட்ட, காலி மீன்பிடி துறைமுகம், காலி கோட்டை, ததெல்ல மற்றும் கிந்தோட்டை முகத்துவாரம் ஆகிய கடற்கரைப் பகுதிகளில் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் அகற்றப்பட்டதன் மூலம் அதன் வழக்கமான தோற்றம் மீண்டும் ஏற்பட்டுள்ளதாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.

கொவிட்-19 பரவலைத் தடுக்கும் சுகாதார வழிகாட்டலுக்கமைய இந்த வேலைத்திட்டம் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது