--> -->

லெபனானில் ஐ.நா. அமைதிகாக்கும் பணிகளில் ஈடுபட இராணுவத்தின் பெண் வீராங்கனைகள் அடங்கலான பாதுகாப்புக்குழு நாட்டிலிருந்து பயணம்

ஜனவரி 31, 2022

லெபனான் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படைக்கு செல்லும் 13 வது பாதுகாப்பு குழுவின் பிரியாவிடை அணிவகுப்பு மரியாதை , ஞாயிற்றுக்கிழமை (ஜனகரி, 30) பனாகொடை இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் தலைமையகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இலங்கை இராணுவ மகளிர் படையணி பெண் சிப்பாய்கள், பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதம அதிகாரியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவுக்கு இராணுவ சம்பிரதாயங்களுக்கமைய இராணுவ மரியாதை வழங்கினர்.

லெபனான் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படைக்கு செல்லும் 13 வது பாதுகாப்பு குழுவின் 10 அதிகாரிகள் பெண்கள் உட்பட 115 சிப்பாய்கள் ஆபங்கு பற்றியதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

லெபனானின் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக, இரண்டு பெண் அதிகாரிகள் மற்றும் இலங்கை மகளிர் படையணியின் ஏழு பெண் சிப்பாய்களை உள்ளடக்கிய லெபனான் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படைக்கான முதல் பெண் படைக் குழு இதுவாகும்.

ஐக்கிய நாடுகளின் பணிக்கு அடையாளத்தின் முக்கியத்துவத்தைச் சேர்க்கும் வகையில், பிரதம அதிதியான இரானுவத்தலபதியினால் தேசியக் கொடி, இராணுவக் கொடி, ஐக்கிய நாடுகளின் கொடி மற்றும் இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் கொடி ஆகியன சம்பிரதாயபூர்வமாக கையளிக்கப்பட்டன.

Tamil