சுதந்திர தின நிகழ்வுகளின் ஒத்திகையை பாதுகாப்பு செயலாளர் மேற்பார்வை

பெப்ரவரி 02, 2022

கொழும்பு, சுதந்திர சதுக்கத்தில் எதிர்வரும் 4ம் திகதி இடம்பெறவுள்ள சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை நிகழ்வுகளை பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும், தேசிய பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் செயலாளருமான ஜெனரல் கமல் குணரத்ன இன்று (பெப்ரவரி, 02) மேற்பார்வை செய்தார்.

சுதந்திர தின நிகழ்வின் தற்போதைய நிலைமைகள், அணிவகுப்பு மரியாதை, இராணுவ கட்டமைப்பு, கவச வாகனங்கள் பவனி, பாதுகாப்பு கலாச்சார கண்காட்சி, அதிதிகளின் இருக்கை ஒழுங்கமைப்பு மற்றும் சுகாதார ஏற்பாடுகள் போன்றவற்றை முப்படைத் தளபதிகளுடன் இணைந்து பாதுகாப்புச் செயலாளர் ஆய்வு செய்தார்.

மேலும் இந்த தேசிய நிகழ்வின் அனைத்து ஏற்பாடுகளையும் கவனமாகப் பரிசோதித்த பாதுகாப்பு செயலாளர், பின்னர் நடைபெற்ற கலந்துரையாடலின் போது விழாவினை மேலும் மேம்படுத்துவதற்கு தேவையான வழிகாட்டுதல்களையும் வழங்கினார்.

இந்த விஜயத்தின்போது, புத்தசாசன, கலாசார மற்றும் மத அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன, பதில் பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரன, சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ரஞ்சன் லமாஹேவகே (ஓய்வு), இலங்கை கடலோர பாதுகாப்பு படையின் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் அனுர ஏக்கநாயக்க, தேசிய மாணவர் படையணியின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் பிடபல்யூபி ஜயசுந்தர (ஓய்வு), அரச நிறுவனங்களின் தலைவர்கள், அரச அதிகாரிகள், ஏற்பாட்டுக் குழுவினர் மற்றும் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் ஆகிகலந்து கொண்டனர்.