தேசிய பாதுகாப்பு கல்லூரியில் வெளிவிவகார அமைச்சரினால் விரிவுரை

பெப்ரவரி 11, 2022

வெளிவிவகார அமைச்சர் கௌரவ. பேராசிரியர் ஜி.எல்.பீரிஸினால் தேசிய பாதுகாப்பு கல்லூரியில் விரிவுரை நேற்று (பெப்ரவரி, 10) நிகழ்த்தப்பட்டது. ‘ஆயுதப்படைகள், மனித உரிமைகள் சட்டம் மற்றும் ஜெனீவா செயல்முறை’ எனும் தலைப்பில் இந்த விரிவுரை இடம் பெற்றது.

இராணுவ மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகளை உள்ளடக்கிய தேசிய பாதுகாப்பு கல்லூரியினது பாடநெறி இல. 01 இன் பங்கேற்பாளர்களுக்கு பேராசிரியரினால் இந்த விரிவுரை நிகழ்த்தப்பட்டது.

மனித உரிமைகள் சட்டங்கள் மற்றும் பிற நெறிமுறைக் கடமைகளுக்கு இணங்க ஆயுதப் படைகள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து வெளியுறவு அமைச்சர் விரிவுரை நிகழ்த்தினார்.

ஆக்கபூர்வமான கல்விசார் உரையைத் தொடர்ந்து மிகவும் ஊக்கமளிக்கும் வகையில் கேள்வி பதில் அமர்வு ஒன்றும் இதன்போது இடம்பெற்றதாக தேசிய பாதுகாப்பு கல்லூரி தெரிவித்துள்ளது.

இந்த விரிவுரையையடுத்து வெளிவிவகார அமைச்சருக்கு நினைவுச் சின்னம் ஒன்று தேசிய பாதுகாப்பு கல்லூரி என்ன கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகரவினால் வழங்கி வைக்கப்பட்டது.

மேலும், தேசிய பாதுகாப்பு கல்லூரிக்கு வருகை தந்ததைக் குறிக்கும் வகையில்,வெளிவிவகார அமைச்சர் அதிதிகள் கையொப்பமிடும் புத்தகத்தில் கையப்பமிட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Tamil