ஜப்பானிய கடலோர பாதுகாப்புபடை மற்றும் ஜெய்கா நிறுவனத்தினால் இலங்கை கடலோர பாதுகாப்பு படையின் எண்ணெய் கசிவு தடுப்பு திறன்கள் மதிப்பீடு

பெப்ரவரி 14, 2022

ஜப்பானிய கடலோர பாதுகாப்பு படை மற்றும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் (ஜெய்கா) குழுவொன்று நேற்று (பெப்ரவரி, 13) வெள்ளவத்தையில் உள்ள இலங்கை கடலோர பாதுகாப்பு படையின் தலைமையகத்திற்கு வருகை தந்தது.

இதற்கமைய, இலங்கை கடலோர பாதுகாப்பு படையின் எண்ணெய் கசிவு தடுப்பு திறன்களை மேம்படுத்துவதற்கான ஆலோசனை சேவையை வழங்குவதற்கான ‘கட்டம் III’ ஒப்பந்தத்திற்கமைய இது நடத்தப்படும் என கடலோர பாதுகாப்பு படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

வருகை தந்த குழுவினருக்கும் கடலோர பாதுகாப்பு படை பயிற்சிப் பணிப்பாளர் கெப்டன் சந்தன பிரியந்த மற்றும் அப்படையின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கிடையில் கட்டம் - 111 தொடர்பான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

மேலும், எதிர்வரும் காலங்களில் இலங்கை கடலோர பாதுகாப்பு படையின் எண்ணெய் கசிவு தடுப்பு திறன்களை மேம்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளன என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

ஜப்பானிய கடலோர பாதுகாப்பு படை மற்றும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் (ஜெய்கா) ஆனது இலங்கை கடலோர பாதுகாப்பு படையின் எண்ணெய் கசிவு தடுப்பு திறன்களை மேம்படுத்துவதற்கான ஆலோசனை சேவையை அடிப்படையாக கொண்ட இரண்டு கட்டங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளன. அதன் 'கட்டம் - I' ஆனது 2015- 2017 (அடிப்படை கடலோர எண்ணெய் கசிவு தடுப்பு பயிற்சி) , 'கட்டம் - II' 2019 - 2021 வரை இடம்பெற்றது.
 
ஜெய்காவின் சிரேஷ்ட ஆலோசகர் கொஜி சுச்சியா தலைமையிலான குழுவில் டைகி மயேனோ, ஹிர்யுகி புக்குஷிமா, இச்சிஹரு தனகா, யோசிமி கரசவா மற்றும் ஜெய்கா இலங்கை அலுவலகம் சார்பில் சிமந்தா கசுகி ஆகியோர் அடங்குகின்றனர்.