பல்கலைக்கழக வைத்தியசாலையில் புற்றுநோயியல் மற்றும் கண் சிகிச்சை நோயாளிகளுக்கான உள்ளக வார்டு திறப்பு

பெப்ரவரி 16, 2022

வேரஹெர கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலையில் புற்றுநோயியல் மற்றும் கண் மருத்துவ நோயாளிகளுக்கான உள்ளக வார்டு வசதி அப் பல்கலைக்கழக உபவேந்தர் ஜெனரல் மிலிந்த பீரிஸினால் 2022 பெப்ரவரி 15ம் திகதி திறந்து வைக்கப்பட்டது.

வைத்தியசாலை வளாகத்தில் இடம்பெற்ற இந்த திறப்பு விழாவில் அதிதிகள் பலர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் பல்கலைக்கழக வைத்தியசாலையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் டாக்டர் பி.ஜெயன் மெண்டிஸ், வைத்தியசாலை சேவையின் பணிப்பாளர் பிரிகேடியர் பி.எஸ்.திலகரத்ன, நிர்வாகப் பணிப்பாளர் கேர்ணல் ஈஎம்ஜீஎச்கேபி தெஹிதெனிய RWP RSP , டொக்டர் ஜயந்த பாலவரதன, டொக்டர் சச்சினி ரஸ்நாயக்க, டொக்டர் அருணா பெர்னாண்டோ மற்றும் பல ஆலோசகர்கள், மருத்துவ அதிகாரிகள், சிரேஷ்ட முப்படை அதிகாரிகள் மற்றும் பல்கலைக்கழக வைத்தியசாலை ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

மேலும், வார்டுகளின் வசதிகளை மேம்படுத்துவதற்கு பங்களிப்பு வழங்கிய வரையறுக்கப்பட்ட சியோல் சர்வதேச நிறுவனம் மற்றும் வரையறுக்கப்பட்ட ஹேமாஸ் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.