போர் வீரர்களுக்கு மேலும் மின்சார மோட்டார் சைக்கிள்கள் வழங்கிவைப்பு

பெப்ரவரி 22, 2022

வடமேல் மாகாணத்தில் வாழும் போர்வீரர்களின் நாளாந்த பணிகளை இலகுபடுத்தும் வகையில் ஆறு மின்சார மோட்டார் சைக்கிள்கள் மற்றும் அங்கவீனமுற்றோருக்கான உதவிக் கருவிகள் வழங்கும் நிகழ்வு அண்மையில் குருநாகல் லிச்சவி மண்டபத்தில் ரணவிரு சேவா அதிகார சபையின் தலைவர் மேஜர் ஜெனரல் நந்தன சேனாதீர (ஓய்வு) தலைமையில் நடைபெற்றது.

அங்கவீனமுற்ற போர்வீரர்கள் அவர்களின் நாளாந்த பணிகளை இலகுபடுத்துவதற்காக ரணவிரு சேவா அதிகார சபையானது மின்சார மோட்டார் சைக்கிள்களை கொள்வனவு செய்வதற்கு 170 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாக ரணவிரு சேவா அதிகார சபை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிகழ்வில் ரணவிரு சேவா அதிகார சபை பணிப்பாளர் மேஜர் ஜெனரல் கித்சிறி ஏகநாயக்க (ஓய்வு), ரணவிரு சேவா அதிகார சபைதலைவரின் சிரேஷ்ட பிரத்தியேக உதவியாளர், பிரிகேடியர் ரொஷான் திரிமான்ன, வடமேல் மாகாண பிரதிப் பணிப்பாளர் பாக்ய கமகே, குருநாகல் மாவட்ட உத்தியோகத்தர் சத்சர பத்திராஜ மற்றும் போர்வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.