இலங்கை -பாகிஸ்தான் கடற்படைத் தளபதிகள் சந்திப்பு

பெப்ரவரி 24, 2022

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பாகிஸ்தானுக்குச் சென்றுள்ள இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகெதென்ன, பாகிஸ்தான் கடற்படைத் தளபதி அட்மிரல் எம் அம்ஜத் கான் நியாசியை கடந்த பெப்ரவரி 22 ஆம் திகதி பாகிஸ்தான் கடற்படைத் தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.

பிராந்திய பாதுகாப்பு மற்றும் இருதரப்பு முக்கியத்துவம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டதாகத இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இலங்கை கடற்படைத் தளபதி பாகிஸ்தானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பெப்ரவரி 21 ஆம் திகதி சென்றதாக இலங்கை கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.