இலங்கை விமானப்படை தனது 71வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது

மார்ச் 02, 2022

இலங்கை விமானப்படை இன்று (மார்ச் 03) தனது 71வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது. விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரனவின் தலைமையில் கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் தனது ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடுகிறது.

ரோயல் சிலோன் விமானப்படை என அறியப்பட்ட இலங்கை விமானப்படையானது 1951 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2 ஆம் திகதி ஸ்தாபிக்கப்பட்டது. இது 1949 ஆம் ஆண்டு 49- 41ம் இலக்க பாராளுமன்ற பத்திரத்திற்கு அமைய ஸ்தாபிக்கப்பட்டது.

இந்த பத்திரத்தின் மூலம் விமானப்படை நிரந்த சேவை, விமானப்படை நிரந்த ஒதுக்கு சேவை, விமானப்படை தொண்டர் சேவை மற்றும் விமானப்படை தொண்டர் ஒதுக்கு சேவை ஆகியவற்றை வழங்குகிறது.

1972ம் ஆண்டு நாடு குடியரசாக மாறியபோது, ​​ரோயல் சிலோன் விமானப்படை இலங்கை விமானப்படை என பெயர் மாற்றம் பெற்றது.

இன்றுவரை 18 தளபதிகள் கட்டளை வழங்கப்பட்டுள்ள இலங்கை விமானப்படை, இலங்கையின் வான் பிரதேசத்தின் பாதுகாவலர்களாக சேவை செய்வதற்கும் பாதுகாப்பதற்கும் எதிர்காலத்தின் அனைத்து சவால்களையும் எதிர்கொள்ள தயாராக உள்ளது.