தென்னாப்பிரிக்க உயர்ஸ்தானிகர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

மார்ச் 03, 2022

இலங்கைக்கான தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் அதிமேதகு சாண்டில் எட்வின் ஷால்க், பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார். இந்த சந்திப்பு ஜயவர்தனபுர, கோட்டேயில் அமைந்துள் பாதுகாப்பு அமைச்சில் இன்று (மார்ச் 03) இடம்பெற்றது.

பாதுகாப்பு அமைச்சுக்கு வருகைதந்த புதிதாக நியமிக்கப்பட்ட உயர்ஸ்தானிகரை பாதுகாப்பு செயலாளர் வரவேற்றார்.

இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையே தற்போதும் நிலவும் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் முக்கிய விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

கொவிட் நிலைமையை திறம்படக் கையாண்டதற்காகவும், சுற்றுலா பயணிகளுக்காக நாட்டைத் திறந்ததற்காகவும் இலங்கை அரசாங்கத்தை தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் இதன் போது பாராட்டினார்.

தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகரின் முதல் விஜயத்தினை நினைவு கூறும் வகையில் வகையில் நினைவுச் சின்னங்கள் மற்றும் பரிசுப்பொருட்கள் என்பன பரஸ்பரம் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

உயர்ஸ்தானிகர் ஷால்க், 2021 நவம்பர் 16ம் திகதி கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தனது உத்தியோகபூர்வ சான்றிதழை கையளித்திருந்தார்.

இந்த சந்திப்பில் தென்னாபிரிக்க பிரதி உயர்ஸ்தானிகர் / அரசியல் ஆலோசகர் திருமதி ரெனே எவர்சன்-வார்னி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் தினேஷ் நாணயக்கார ஆகியோரும் கலந்துகொண்டனர்.