ஈரான் தூதுவர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

மார்ச் 03, 2022

இலங்கைக்கான ஈரான் இஸ்லாமிய குடியரசின் தூதுவர் அதிமேதகு திரு. ஹஷேம் அஷ்ஜசாதே, பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார். இந்த சந்திப்பு ஜயவர்தனபுர, கோட்டேயில் அமைந்துள் பாதுகாப்பு அமைச்சில் இன்று (மார்ச் 03) இடம்பெற்றது.

இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் முக்கிய விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

மேலும் மேலும் இந்த நிகழ்வினை நினைவுகூரும் வகையில் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் ஈரானிய தூதுவர் ஆகியோருக்கிடையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டது.

இந்த சந்திப்பில் பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் தினேஷ் நாணயக்கார, ஈரானிய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் ஹொமயொன் அலியாரி மற்றும் தூதாக அதிகாரி திரு. சொஹைல் ஹெய்ரி ஆகியோரும் கலந்துகொண்டனர்.