28 புத்தர் சிலைகளை ஏந்திய வாகன பவனி இன்று நா உயனவில் இருந்து அனுராதபுரத்திற்கு பயணமானது

மார்ச் 04, 2022

சந்தஹிரு சேய வளாகத்தில் வைக்கப்படவுள்ள புனித 28 புத்தர் சிலைகளை தாங்கிய வாகன பவனி இன்று காலை (மார்ச் 4) மெல்சிறிபுர நா உயன ஆரண்ய சேனாசனத்தில் இருந்து தனது பயணத்தை ஆரம்பித்தது.

இந்த 28 புனித புத்தர் சிலைகளும் தம்புள்ளை மற்றும் மிஹிந்தலையை கடந்து அனுராதபுரத்தின் புனித நகரத்தில் அமைந்துள்ள சந்தஹிரு சேய வளாகத்தை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சந்தஹிரு சேய வளாகத்தில் நாளை (மார்ச், 05) நிகழும் சுபவேளை காலை 08.30 மணிக்கு வணக்கத்துக்குரிய மகா சங்கத்தினரின் பெளத்த சமய ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் புத்தர் சிலைகளை பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தலைமையில் இடம்பெறவுள்ளது. அன்றைய தினம் சமய நிகழ்வுகள் யாவும் அட்டமஸ்தானாதிபதி வண. கலாநிதி பல்லேகம சிறினிவாச தேரர் தலைமையில் இடம்பெறவுள்ளன.

இன்று நா உயன ஆரண்ய சேனாசனத்தில் சமய பவனியை ஆரம்பிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் குணரத்ன, கற்களால் செதுக்கப்பட்ட பிரகாரங்கள் (சலபத்தல மலுவ), 28 புனித புத்தர் சிலைகளை வழங்குவதற்கு ஏற்பாடு செய்த வண. அங்குல்கமுவே அரியநந்த தேரரின் புன்னிய பணியை நினைவு கூர்ந்தார்.

பன்முக தோற்றம் கொண்ட ஐந்து புத்தர் சிலைகள் பதிக்கப்பட்ட புனித நினைவுச் சின்னங்களைக் கொண்ட சந்தஹிரு சேய புத்தர் சிலை அதே நாளில் திறந்து வைக்கப்பட்டு பக்தர்களின் வணக்க வழிபாடுகளுக்கு ஒப்படைக்கப்படவுள்ளதாக ஜெனரல் குணரத்ன மேலும் தெரிவித்தார்.