28 புத்த சிலைகள் சந்தஹிரு சேய வளாகத்தில் இன்றைய தினம் திரைநீக்கம்

மார்ச் 05, 2022

28 புனித புத்த சிலைகள் வணக்கத்துக்குரிய மகா சங்கத்தினரின் சமய கிரிகைகளுடன் அநுராதபுரம், சந்தஹிரு சேய வளாகத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த நிகழ்வு பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தலைமையில் இன்று (மார்ச், 05) மாலை இடம்பெற்றது.

சந்தஹிரு சேய வளாகத்தில் வைப்பதற்காக நேற்றைய தினம் நா உயன ஆரண்ய சேனாசனத்தில் இருந்து பவனியாக கொண்டு வரப்ப்பட்ட புத்த சிலைகளை பாதுகாப்புச் செயலாளருடன் இணைந்து விமானப்படைத்தளபதியும் தூபி வளாகத்தில் வைத்தனர்.

புத்த சிலைகள் பிரதிஷ்டை செய்யும் இந்த நிகழ்வு மகா சங்கத்தினரின் அடாவிசி புத்த பூஜை மற்றும் போதி வந்தனம் உள்ளிட்ட மத அனுஷ்டானங்கள் மற்றும் சடங்குகளுக்கு மத்தியில் இடம்பெற்றது.

 இந்த நிகழ்வில் வரவேற்புரை ஆற்றிய பாதுகாப்புச் செயலாளர், வணக்கத்துக்குரிய மகாசங்கத்தினர் மற்றும் அனைத்து அதிதிகளையும் வரவேற்றார்.

இன்றைய நிகழ்ச்சியில் சந்தஹிரு சேய வளாகத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட புத்த சிலைகளை காலை வேளையில் திறந்து வைக்கப்பட்டு பக்தர்களுக்கு வணக்க வழிபாடுகளுக்காக திறந்து வைக்கப்பட்டது.
 
அடமஸ்தானாதிபதி வணக்கத்துக்குரிய வண. கலாநிதி பல்லேகம சிறினிவாச தேரரினால் நிகழ்த்தப்பட்ட சமய அனுஷ்டானங்களில் 300 பௌத்த பிக்குகள், அதிதிகள் மற்றும் பக்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நா உயன ஆரண்ய சேனாசனத்தின் பிரதம மடாதிபதி வண. அங்குல்மாலுவே அரியநந்த தேரர் இந்த நிகழ்வின் போது அனுசாசனம் வழங்கினார்.

காலை வேளையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வின் போது உரையாற்றிய ஜெனரல் குணரத்ன, "இந்த விஹாரை அறை புத்த சிலைகள் புனித நினைவுச்சின்னங்களுடன் பதிக்கப்பட்டுள்ளன" என்றார்.

ஐந்தாவது நிறைவேற்று ஜனாதிபதியும் தற்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷவின் கருத்திட்டத்திற்கமைய சந்தஹிரு தூபியை நிர்மாணிப் பட்டதாக குறிப்பிட்ட ஜெனரல் குணரத்ன, போர் வீரர்களின் வீரதீரச் செயல்களையும் இதன்போது நினைவு கூர்ந்தார்.

அனுசாசனத்தை வழங்கிய வண. மெதகொட அபயதிஸ்ஸ தேரர், நாட்டில் அமைதியை ஏற்படுத்துவதற்கு பொறுப்பானவர்களின் மகத்தான பங்களிப்பு மற்றும் புனித வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள சந்தஹிரு சேய தூபி மற்றும் புத்த சிலைகளின் முக்கியத்துவம் குறித்து பக்தர்களுக்கு தெளிவுபடுத்தினார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் சில மாதங்களுக்கு முன்னர் ‘சந்தஹிரு சேய தூபி’யை பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவின் அழைப்பின் பேரில் அனுராதபுரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சமய நிகழ்வொன்றின் போது வண. மகா சங்கத்தினர் நாட்டின் போர் வீரர்களுக்கு அதியுயர் அஞ்சலியை வழங்கினர்.

காலை வேளையில் இடம்பெற்ற நிகழ்வைத் தொடர்ந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் நிகழ்விடத்திற்கு வருகைதந்து முன்னேற்றங்களை நேரில் பார்வையிட்டார். பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி ராஜபக்ஷவுடன் சென்று புனித ஸ்தலத்தின் எதிர்கால ஏற்பாடுகள் தொடர்பாக விளக்கினார்.

 இன்று இடம்பெற்ற நிகழ்வுகளின் போது வணக்கத்துக்குரிய மகாசங்கத்தினர், அமைச்சர்கள், பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி, கடற்படை மற்றும் விமானப்படை தளபதிகள், சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், அரச அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.