கடலோர பாதுகாப்பு படை இராணுவம் மற்றும் விமானப்படை வீரர்களுக்கு அதிக பயிற்சி வாய்ப்புகளை வழங்குகிறது

மார்ச் 07, 2022

பலப்பிட்டியில் உள்ள கடலோர பாதுகாப்புப்படை உயிர்காப்பு பயிற்சிப் பாடசாலையில் கடலோர பாதுகாப்புப்படையின் உயிர்காப்பு பயிற்றுவிப்பாளர்கள் குழுவினால் பயிற்சியளிக்கப்பட்ட உயிர்காப்பு பயிற்சி நெறியை வெற்றிகரமாக பூர்த்தி செய்த கடலோர பாதுகாப்பு படை, இராணுவம் மற்றும் விமானப்படை வீரர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி வைக்கப்பட்டதாக கடலோர பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

கடலோர பாதுகாப்புப்படையின் 12வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் 21 இராணுவ மற்றும் விமானப்படை உறுப்பினர்களுக்கு அடிப்படை உயிர்காப்பாளர்கள் சான்றிதழ்களும், 10 கடலோர பாதுகாப்புப்படை வீரர்களுக்கு பூல்உயிர்காப்பாளர்கள் சான்றிதழ்களும் வழங்கப்பட்டதாக அது மேலும் தெரிவித்துள்ளது.

நீரில் மூழ்கும் சம்பவங்களால் ஏற்படும் இறப்பு விகிதத்தை குறைக்கும் நோக்கில் இராணுவம் மற்றும் விமானப்படை உறுப்பினர்களுக்கு கடலோர பாதுகாப்புப்படை வீரர்களினால் அதிக உயிர்காப்பாளர் பயிற்சி வாய்ப்புகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.