விமானப்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட சைக்கிள் ஓட்டப் போட்டி வெற்றிகரமாக நிறைவு

மார்ச் 08, 2022

விமானப்படையினரால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் “குவான் ஹமுதா பாபபெதி சவாரிய-2022” சைக்கிள் ஓட்டப் போட்டி இம்மாதம் 04ம் திகதி முதல் 06ம் திகதி வரை நடைபெற்றது.

விமானப்படை ஆண்டு நிறைவையொட்டி தொடர்ச்சியாக 23 ஆவது ஆண்டாக ஏற்பாடு செய்யப்பட்ட 412 கிலோமீட்டர் தூரத்தைக் கொண்ட இந்த சைக்கிள் ஓட்டப் போட்டியில் ஆண்களுக்கான போட்டி 04ம் திகதி முதல் 06ம் திகதி வரை மூன்று கட்டங்களாக நடைபெற்றது.

பெண்களுக்கான 100 கிலோமீற்றர் தூரத்தைக் கொண்ட சைக்கிள் ஓட்டப் போட்டி 06ம் திகதி புத்தளத்தில் ஆரம்மாகி கட்டுநாயக்காவில் நிறைவடைந்தது.

ஆண்கள் பிரிவில் இராணுவத்தைச் சேர்ந்த அவிஷ்க மடோன்சா ஒட்டு மொத்த சம்பியன்ஷி கோப்பையை வென்றதுடன், அணி சாம்பியன்ஷிப் கோப்பையை இலங்கை இராணுவத்தின் சைக்கிள் அணியினர் கைப்பற்றியதாக விமானப்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.  

பெண்களுக்கான சைக்கிள் ஓட்டப் போட்டியில் இராணுவத்தின் ஷாலிகா தில்ஹானி வெற்றியீட்டியீட்டியதாவும் இராணுவத்தின் சைக்கிள் ஓட்டுதல் அணிசாம்பியன்ஷிப் பட்டத்தை சுவீகரித்ததாகவும் விமானப்படை மேலும் தெரிவித்துள்ளது.
 
இந்த முதற்தர சைக்கிள் ஓட்டப் போட்டியின் பரிசளிப்பு விழா கட்டுநாயக்க ஈகிள்ஸ் லகூன் வியூ பேங்க்வெட் மண்டபத்தில் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரனவின் தலைமையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.