அக்குரஸ்ஸ வைத்தியசாலைக்கு விமானப்படையினரால் மருத்துவ உபகரணங்கள் கையளிப்பு

மார்ச் 10, 2022

இலங்கை விமானப்படை அண்மையில் அக்குரஸ்ஸ மாவட்ட வைத்தியசாலைக்கு ஒக்ஸிஜன் தெரபி உபகரணங்களை கையளித்தது. விமானப்படையினரால் தயாரிக்கப்பட்ட இந்த ஒக்ஸிஜன் தெரபி உபகரணங்கள் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் எம். விதானபத்திரனவிடம் செவ்வாய்க்கிழமை (மார்ச் 08) கையளிக்கப்பட்டதாக விமானப்படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தெஹிவளை, 306/A - 02 லயன்ஸ் கிளப் உறுப்பினர்களால் வழங்கப்பட்ட நிதியுதவியுடன் கொக்கல விமானப்படை நிலையத்தில் உள்ள விமானப்படை சேவா வனிதா பிரிவினால் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி இந்த மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டதாக அது மேலும் தெரிவித்துள்ளது.

இந்த மருத்த உபகரணங்களை கையளிக்கும் நிகழ்வில் விமானப்படை அதிகாரிகள், வைத்தியசாலை அதிகாரிகள் மற்றும் லயன்ஸ் கிளப் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.