சேதமடைந்த ஊஞ்சல் பாலம் இராணுவத்தினரால் புனரமைப்பு

மார்ச் 11, 2022

புறாக்கள் தீவை மாத்தறை நகருடன் இணைக்கும் சேதமடைந்த ஊஞ்சல் பாலத்தின் திருத்தப்பணிகளில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினர், அதற்கான தற்காலிக மாற்றுப் பாலத்தை நிர்மாணிக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

12 பொறியாளர் படைப்பிரிவு, 14 இரசாயன உயிரியல் கதிரியக்க மற்றும் அணுசக்தி படைப்பிரிவு, 16 வேலைத்தள படைப்பிரிவு, 4 பொறியாளர் படைப்பிரிவு, 12 பொறியியலாளர் சேவைப் படை, 613 படையணி மற்றும் 3 கெமுனு வோட்ச் படையணி உள்ளிட்ட படையணிகளின் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் இந்த புணரமைப்பு மற்றும் தற்காலிக பாலம் அமைக்கும் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
ஸ்ரீ ரோஹண சங்க சபையான உபோஷிதாகராய அமைந்துள்ள புறாக்கள் தீவில் உள்ள கோவிலுக்கு பார்வையாளர்கள் செல்வதற்கு இந்த பாலம் உதவுவதாக இராணுவம் தெரிவித்துள்ளது.