படை வீரர்களுக்கான நலத்திட்டம்
ஒக்டோபர் 19, 2018தாய் நாட்டிற்காக தமது உயிர்களை தியாகம் செய்த போர் வீரர்களின் குழந்தைகள், மனைவிகள், பெற்றோர் ,இரத்த உறவுகள், யுத்தத்தின் போது அங்கவீனமுற்ற வீரர்கள் மற்றும் சேவையில் உள்ள முப்படை வீரர்கள் ஆகியோருக்கு நன்மை பயக்கும் வகையில் பாதுகாப்பு அமைச்சினால் பாரிய நலன்புரி திட்டமான 'சத்விரு அபிமன்' திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
இதன் வைபவ ரீதியான நிகழ்வு தாமரைத்தடாக திரையரங்கில் அதிமேதகு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் வியாழனன்று இடம்பெற்றது.
குறித்த இவ் வைபவம் ஜனாதிபதி மற்றும் அதிதிகள் ஆகியோரினால் மங்கள விளக்கேற்றும் வைபவத்துடன் ஆரம்பமானது.
பாதுகாப்பு அமைச்சினால் செயற்படுத்தப்படும் இத்திட்டம் தொடர்பான நிகழ்வின் வரவேற்ரை ஜனாதிபதி சட்டத்தரணி திரு. கபில வைத்தியரத்ன அவர்களினால் நிகழ்த்தப்பட்டது. மேலும் இத்திட்டம் தொடர்பான எண்ணக்கருக்களை விளக்கமளிக்கும் விஷேட உரை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்களினால் அளிக்கப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ்
1. 'மெத் செவன' பகுதியளவில்-பூர்த்தி செய்யப்பட்ட வீடுகளுக்கான நிதி (தேசிய பாதுகாப்பு நிதி),
2. தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சாதித்த மாணவர்களுக்கான ரூ.25,000. பெர்மதியான புலமைப்பரிசில்கள் (தேசிய பாதுகாப்பு நிதி), ,
3. முப்படை நலன்புரி கிளைகளின் ஊடாக காணியற்ற 84 பேருக்கு காணி உறுதிப்பத்திரங்கள் (பாதுகாப்பு அமைச்சி நிதி)
4. 'அபி வெனுவென் அபி' நிதி கீழ் பகுதியளவில்-பூர்த்தி செய்யப்பட்ட வீடுகளுக்கான நிதி உதவி
5. அபி வெனுவென் அபி' நிதி கீழ் பூரண வீடமைப்புக்கான நிதி உதவி என்பன வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளர், பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி, முப்படை தளபதிகள், முப்படையின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் பயனாளிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.