பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கடமைகளை பொறுப்பேற்பு

மார்ச் 16, 2022

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக கௌரவ சமல் ராஜபக்ஷ கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.  ஸ்ரீ ஜயவர்தனபுர, கோட்டேயில்  உள்ள பாதுகாப்பு அமைச்சில் இன்று (மார்ச், 16)   இடம் பெற்ற வைபவத்தின் போதே அவர் வணக்கத்துக்குறிய மகா சங்கத்தினரின் சமய ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் அமைச்சின் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

பாதுகாப்பு தலைமையக வளாகத்திற்கு வந்த அமைச்சரை பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன வரவேற்று அலுவலகத்திற்கு அழைத்து சென்றார்.

இதன்போது, அபயராமய விஹாரையின் பிரதம விஹாராதிபதி வண. முருத்தெட்டுவே ஆனந்த தேரர், தலைமையில் பௌத்த சமய வழிபாடுகள் இடம்பெற்ற அதேவேளை  அலுவலகத்தில் செத்பிரித் பாராயணம் செய்யப்பட்டதுடன் பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரரினால் அனுசாசனமும்  வழங்கப்பட்டது.

மேலும்  புதிய அலுவலகத்தை பொறுப்பேற்றுக்கொண்டதைக் குறிக்கும் வகையில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரினால்  சுப வேளையில் ஆவணத்தில் கையொப்பமிடப்பட்டது.

பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரி  மற்றும் இராணுவத் தளபதி, கடற்படைத் தளபதி,விமானப்படைத் தளபதி, பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர்கள், சிவில் பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் நாயகம், பாதுகாப்பு அமைச்சு மற்றும் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சின் கீழுள்ள நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும்  பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டதுடன் அமைச்சருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.

கௌரவ சமல் ராஜபக்ஷ தற்போது நீர்ப்பாசன அமைச்சராக பதவி வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது