ஐ.நா அமைதிகாக்கும் நடவடிக்கைகளில் இரண்டு இலங்கை விமானப்படை ஹெலிகாப்டர்கள் பரிமாற்றம்

ஏப்ரல் 04, 2022

இலங்கை விமானப்படை (SLAF) இரண்டு MI-17 ஹெலிகாப்டர்களை மத்திய ஆபிரிக்க குடியரசில் உள்ள ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் (MINUSCA) நடவடிக்கைகளில்  ஈடுபட்டிருக்கும் SLAF விமானப் படை பிரிவுக்கு அனுப்பி வைத்துள்ளது. இதன்படி  சுழற்சி செயல்முறையின் ஒரு பகுதியாக, அங்கு (MINUSCA)  சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த  மூன்று MI-17 ஹெலிகாப்டர்கள், அதன் செயல்பாட்டுக் காலத்தை சமீபத்தில் முடித்த நிலையில் இலங்கைக்குத் திரும்பியுள்ளன.

விமானப்படை தலைமை அதிகாரியின் மேற்பார்வையின் கீழ் விமானப்படையின் ஐ.நா செயட்பாடுகள் பிரிவு மூலம் மார்ச் 29 முதல் ஏப்ரல் 02 வரை இந்த சுழற்சி செயல்முறை நடைபெற்றதாகவும் விமானப்படை வட்டாரங்கள் தெரிவித்தன.