பாதுகாப்பு அமைச்சினால் 2022 ஏப்ரல் 11ஆம் திகதி
வெளியிடப்பட்ட ஊடக அறிக்கை

ஏப்ரல் 11, 2022

இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா, சட்டபூர்வமான சேவை நீடிப்பின்றி அந்த நியமனத்தில் சேவையாற்றுவதக சமூக ஊடக தளங்களில் பொது மக்களை தவறாக வழிநடத்தும் வகையில் போலியாக புனையப்பட்டு பரப்பப்பட்டு வரும் தகவலை பாதுகாப்பு அமைச்சு திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கான சேவை நீடிப்பு 2021ஆம் டிசம்பர் மாதம் 31 முதல் அமுலுக்கு வந்தது. வழங்கப்பட்ட சேவை நீடிப்பு இன்னும் அமுலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.