மாலையுடன் கூடிய காலநிலை தொடரும்

ஏப்ரல் 22, 2022

நாட்டின் பல பகுதிகளில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை தொடர்ந்தும் நீடிக்கக்கூடும். வானிலை ஆராச்சி திணைக்களம் இன்று (ஏப்ரல் 22) நண்பகல் வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பின்படி நாடு முழுவதும் நிலவும் மாலையுடன் கூடிய காலநிலை அதிகரிக்கக்கூடும்.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் அதே வேளையில் மேல் மற்றும் தென் மாகாணங்களில் காலை வேளையிலும் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும், மேலும் வேறு சில பிரதேசங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும்.

புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளுக்கு அப்பாற்பட்ட கடற்பிரதேசத்தில் காற்று  தென்மேற்கு திசையிலிருந்து மணிக்கு 20-30 கிலோ மீற்றர் வேகத்தில் வீசும் எனவும்  அவ்வப்போது மணிக்கு 35-40 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடும். மாத்தறை தொடக்கம் ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்பு ஓரளவு கொந்தளிப்புடன் காணப்படும் என மேலும் தெரிவிக்கப்படுகிறது.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படும் பாதிப்புகளை குறைத்துக்கொள்ள மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.