கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் நடப்பு ஆண்டிற்கான முதுகலை பட்டப்படிப்புகள் ஆரம்பம்

ஏப்ரல் 23, 2022

ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் (KDU) பட்டதாரி கற்கைகள் பீடம் 2022 ஆம் ஆண்டிற்கான முதுகலை பட்டப்படிப்புகளை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்தது.

இதற்கமைய, லாஜிஸ்டிக்ஸ் மேனேஜ்மென்ட்டில், சர்வதேச சட்டம், வணிகச் சட்டம், பொதுச் சட்டம், வியூக ஆய்வுகள் மற்றும் சர்வதேச உறவுகள், சிவில் மற்றும் கட்டமைப்பு பொறியியல், மின் பொறியியல், மின்னணு மற்றும் தொலைத்தொடர்பு உள்ளிட்ட ஒன்பது துறைகளில் முதுகலை பட்டப்படிப்பு பாடங்கள் ஆரம்பிக்கப்பட்டன.

ஏறக்குறைய 170 விண்ணப்பதாரர்கள் இம்முதுகலை பட்டப்படிப்புக்களுக்காக ஏப்ரல் 21 அன்று பல்கலைக்கழக கேட்போர்கூடத்தில் நடந்த நிகழ்வில் பதிவு செய்யப்பட்டதாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா கலந்துக் கொண்டதுடன் புதிய மாணவர்களை  பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ் அன்புடன் வரவேற்றார்.
இந்நிகழ்வில் பல பல்கலைக்கழக உயரதிகாரிகளும் கலந்துக்கொண்டனர்.