கடற்படை லாஜிஸ்டிக்ஸ் மாநாடு 2022 நடைபெற்றது

ஏப்ரல் 25, 2022

இலங்கை கடற்படை லாஜிஸ்டிக்ஸ் மாநாடு 2022 திருகோணமலையில் உள்ள அட்மிரல் வசந்த கரன்னாகொட கேட்போர் கூடத்தில் கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 23) நடைபெற்றது.

மாநாட்டின் போது லாஜிஸ்டிக்ஸ் தொடர்பான மின் இதழும் வெளியிடப்பட்டது. மேலும் நீண்ட லாஜிஸ்டிக்ஸ் மேலாண்மை பாடநெறி இல. 6 இன் பரிசளிப்பு விழாவும் நிகழ்வைத் தொடர்ந்து நடைபெற்றது.

கடற்படை லாஜிஸ்டிக்ஸ் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் நிஷாந்த டி சில்வா இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

'கடற்படை பின்னணியில் நவீன லாஜிஸ்டிக்ஸ்ற்கு இருபத்தோராம் நூற்றாண்டின் மூன்றாம் தசாப்தத்தின் சவால்களை எதிர்கொள்வதற்கான உள்ள வாய்ப்பு' என்ற தொனிப்பொருளில் கீழ் நடத்தப்பட்ட இந்த மாநாடு இரண்டு அமர்வுகளில் நடைபெற்றது. கற்கைநெறியில் பங்கேற்ற மாணவ அதிகாரிகளால் ஆய்வுக்கட்டுரைகளும் இந்நிகழ்வின் போது சமர்ப்பிக்கப்பட்டது என கடற்படை வட்டாரங்கள் தெரிவித்தன.

சிரேஷ்ட இராணுவ, கடற்படை மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் பெருந்தொகையான மாணவர் அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.