திவுலபிட்டிய வைத்தியசாலை வார்ட் இராணுவத்தினரால் புனரமைப்பு

ஏப்ரல் 27, 2022

திவுலப்பிட்டிய மாவட்ட வைத்தியசாலையின் பழுதடைந்திருந்த கோவிட் 19 வார்ட்டின் புனரமைப்புப் பணிகளை இலங்கை இராணுவம் நிறைவு செய்து, வைத்தியசாலை அதிகாரிகளிடம் அண்மையில் உத்தியோகபூர்வமாக கையளித்தது.

மாஸ் நிர்மாண தனியார் நிறுவனத்தினால் வழங்கப்பட்ட நிதி மற்றும் வளங்களைப் பயன்படுத்தி 6 ஆவது இலங்கை பீரங்கிப் படை மற்றும் 141 படையணியின் 1 பொறியாளர் சேவைப் படைப்பிரிவின் துருப்புக்கள் இணைந்து இத்திட்டத்தை நிறைவு செய்துள்ளதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த நிகழ்வில் இராணுவ அதிகாரிகள், மாஸ் நிர்மாண தனியார் நிறுவனத்தின் பிரதிநிதிகள் மற்றும் மருத்துவமனையின் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.