மட்டக்களப்பு விமானப்படை நிலையத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்

மே 05, 2022

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு தேவைப்பட்டிருந்த இரத்தத்தை வழங்கவென மட்டக்களப்பு விமானப்படை நிலையத்தினால் இரத்ததான முகாமொன்று நேற்றைய தினம் (04) நடாத்தப்பட்டது.

இலங்கை விமானப்படை ஊடக தகவல்களுக்கமைய மட்டக்களப்பு விமானப்படை நிலையத்தின் சமூக சேவைப் திட்டத்தின் ஒரு அங்கமாக, மட்டக்களப்பு வைத்தியசாலையில் இரத்த இருப்புக்களை அவசரமாக நிரப்ப வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டி மருத்துவமனை அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க, இந்த இரத்ததான முகாம் நடத்தப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு விமானப்படை நிலையத்தில் சேவையாற்றும் விமானப்படை மற்றும் சிவில் பணியாளர்களின் பலர் அந்நிகழ்வில் போது இரத்ததானம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.