வத்தளையில் மூன்று கடைகளில் ஏற்பட்ட தீயை அணைக்க இலங்கை கடற்படை உதவி

மே 06, 2022

வத்தளை, எலகந்த பிரதேசத்தில் இரண்டு மாடிக் கட்டிடமொன்றில் அமைந்துள்ளது மூன்று ஜவுளிக் கடைகளில் இன்று (மே 06) காலை ஏற்பட்ட தீயை இலங்கை கடற்படையினர் அணைத்துள்ளனர்.

தீ சம்பவம் பற்றிய தகவலைப் பெற்றதைத் தொடர்ந்து, கடற்படை தீயணைப்புக் குழு சம்பவ இடத்திற்கு விரைந்து குடியிருப்பாளர்களின் உதவியுடன், தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததுடன் அதை  மேலும் பரவாமல் தடுத்ததாக கடற்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தீயை அணைப்பதற்காக கடற்படை  முகாம் கெமுனுவில் இணைக்கப்பட்ட தீயணைப்பு வீரர்கள் அனுப்பப்பட்டதாக கடற்படை தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.