ஒரு தொகை சட்டவிரோத சுறா மீன் பாகங்கள் கடலோர பாதுகாப்பு படையினரால் கைப்பற்று
மே 06, 2022இலங்கை கடலோர காவல்படையினர், நீர்கொழும்பு மீன்பிடி துறைமுகத்தில் சட்டவிரோதமாக சேகரிக்கப்பட்ட சுறா மீன் பாகங்களுடன் ஆறு மீனவர்கள் மற்றும் பல நாள் மீன்பிடி படகொன்றையும் கைப்பற்றியுள்ளனர்.
சட்டவிரோதமாக சேகரிக்கப்பட்ட தடைசெய்யப்பட்ட சுறா துடுப்புகள் மற்றும் உலர்ந்த சுறா மீன்களை வைத்திருந்ததற்காக சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக இலங்கை கடலோர காவல்படையினர் தெரிவித்துள்னர்.
மீன்பிடி படகில் சோதனை நடத்திய போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக இலங்கை கடலோர காவல்படை வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
மீன்பிடி மற்றும் நீரியல் வளத் திணைக்களச் சட்டம் 1996 எண். 02 ஆணை எண். 3 (i) ற்கமைய, ‘எந்த சுறா இனத்தின் பாகங்களையும்’ தன்வசம் வைத்திருத்தல், கொண்டுசெல்லல் அல்லது தரையிறக்குதல் ஆகியவை குற்றமாக கருதப்படும்.
கைது செய்யப்பட்ட சட்டவிரோத பொருட்களுடன் சந்தேகநபர்களும், சட்ட நடவடிக்கைகளுக்காக நீர்கொழும்பு கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், இலங்கை கடலோர காவல்படை மேலும் தெரிவித்துள்ளது.