இலங்கை விமானப்படை மாணவர்களுக்கான கல்வி உதவிகளை வழங்கிவைப்பு
ஆகஸ்ட் 23, 2019தெரிவு செய்யப்பட்ட ஒரு தொகுதி மாணவர்களுக்கு கல்வி புலமைப்பரிசில்களை வழங்கி வைக்கும் நிகழ்வு அண்மையில் (ஆகஸ்ட், 22) இடம்பெற்றது. இலங்கை விமானப்படை தலைமையக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் விமானப்படையினால் கல்வி புலமைப்பரிசில்கள் திட்டத்தின் கீழ் விமானப்படையின் சேவையில் உள்ள வீரர்கள் மற்றும் சிவிலியன்கள் ஆகியோரின் குழந்தைகளுக்கு வழங்கி வைக்கப்பட்டன. இக்கல்வி புலமைப்பரிசில்கள் விமானப்படை சேவா வனிதா பிரிவின் நலன்புரித்திட்டத்தின் கீழ் வழங்கி வைக்கப்பட்டதாக விமானப்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த இந்நலன்புரி திட்டத்தின் கீழ் 23 மாணவர்கள் கல்வி உதவிகளை பெற்றுகொண்ட அதேவேளை, 2018ஆம் ஆண்டு க.பொ.தா. சாதாரண தர பரீட்சையில் ஒன்பது "A" சித்திகளை பெற்று தமது திறமைகளை வெளிக்காட்டிய 11 மாணவர்களும் இலங்கை விமானபடையின் சேவா வனிதா பிரிவிடமிருந்து நிதியுதவியினை பெற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்வில் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுமங்கல டயஸ், சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி மயூரி பிரபாவி டயஸ் மற்றும் சிரேஷ்ட விமானப்படை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.