இராணுவத்தினரால் யாழ்ப்பாண மாணவ படையணியினருக்கு தலைமைத்துவப் பயிற்சி

மே 08, 2022

இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் 50 யாழ்ப்பாண பாடசாலை மாணவ படையணியினருக்கு தலைமைத்துவ பயிற்சி நிகழ்ச்சி ஒன்று அண்மையில் தல்செவன விடுமுறை விடுதியில் நடைபெற்றது.

இராணுவ ஊடக தகவல்களுக்கமைய தலைமைத்துவ திறன் , ஆளுமை விருத்தி, முடிவெடுத்தல் திறன் `மற்றும் முறையான உணவக பழக்கவழக்கங்கள் போன்ற விடயங்கள் குறித்து இந்நிகழ்ச்சியில் மாணவ படையணியினருக்கு பயிட்சி அளிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, புனித பெட்ரிக்ஸ் கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் வசாவிளான் மத்திய கல்லூரியின் மாணவ படையணியினர், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் அதிபர் மற்றும் மாணவ படையணி ஆசிரியர்களும் இப்பயிற்சிபட்டறையில் பங்கேற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 51 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் 51 ஆவது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிஹ அவர்களின் முயட்சியின் விளைவாக நிகழ்ச்சித் திட்டம் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.