ஜெனரல் கமல் குணரத்ன மீண்டும் பாதுகாப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்

மே 11, 2022

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தனக்களிக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கமைய, செவ்வாய்கிழமை (மே 10) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மூன்று அமைச்சுகளுக்கான செயலாளர்களை மீண்டும் நியமித்துள்ளார்.

மக்களின் இயல்பு வாழ்க்கையை தொடர்ந்தும் கொண்டு செல்வதற்காக வேண்டி பாதுகாப்பு, பொது பாதுகாப்பு மற்றும் நிதி அமைச்சுகளுக்கான செயலாளர்கள் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி பின்வரும் அதிகாரிகள் மீண்டும் அமைச்சின் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

• பாதுகாப்பு அமைச்சு - ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு)
• பொது பாதுகாப்பு அமைச்சு - மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ் (ஓய்வு)
• நிதி அமைச்சகம் - கே.எம். மஹிந்த சிறிவர்தன

பாதுகாப்பு அமைச்சில் இன்று (மே 11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவும் அவரது நியமனத்தை உறுதிப்படுத்தினார்.